அடுத்த ஆண்டுக்கு அது மட்டும் போதும்

வருகிற புத்தாண்டில்
எனக்கொன்றும்
பெரிசாய்த் தேவையில்லை

பேருந்துகளில் ஏறுகின்ற
மற்றும் அடிக்கடி
என் வீட்டுக்கு வருகின்ற
பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை
ஓரிரண்டாவது குறைந்தால் போதும்...

என்னுடன்
பழகித் திரியும் நண்பர்களும்
பக்கத்து வீட்டு மாமாவும் - என்
தாத்தாவும் தமையனும்
புகைப்பதை விட்டால் போதும்....

அடுத்த ஆண்டுக்கு அது மட்டும் போதும்

எழுதியவர் : ரா. விஜயகாந்த் (31-Dec-11, 3:53 pm)
பார்வை : 317

மேலே