அன்பில் உருகுவோம்..!!
கெட்ட சிந்தனைகள் கெட்டு ஒழியட்டும்
நல்ல சிந்தனைகள் நாளும் பெருகட்டும்
உழைக்கும் வர்க்கங்கள் உயர்வு பெறட்டும்
சோம்பேறிக் கூட்டங்கள் சுகமின்றி தாழட்டும்
அறிவியல் புதுமைகள் நன்மை தரட்டும்
அறிவற்ற குப்பைகள் அழிந்து விலகட்டும்
உயர்வும் தாழ்வும் மண்ணில் மறையட்டும்
தோழமையும் சமரசமும் உலகில் விளையட்டும்
நீதியும் நேர்மையும் தழைத்து ஓங்கட்டும்
அன்பும் அமைதியும் அகிலத்தை ஆளட்டும்
ஆண்மையும் பெண்மையும் அன்பில் உருகட்டும்
இயற்கையும் இறைமையும் புவியில் பெருகட்டும்