ஈழம் ...
![](https://eluthu.com/images/loading.gif)
ஈரமே இல்லா பூமியிலே
இரத்த ஓட்டம் ஆறாக ...
அன்னார்ந்து பார்க்கவே
அஞ்சி ஓடிய நாட்கள் !
பிஞ்சு குழந்தைகளின்
நெஞ்சில்கூட பீறிட்டு வந்த
இரத்த நாளங்கள் !
ஒதுங்க இடமின்றி - பகையாளிகளின்
பதுங்கு குழிகளே பழிவாங்க
படையடுத்து நிற்க்கின்றன !
தடம் பார்த்து ஓடலாம் என்றாலும்
ஐயகோ ... என்ன கொடுமை
என் உடன்பிறந்த , உடன்பிறவா
உயிர் மீதும் , உடல் மீதும்
பாதம் பதித்து ஓடினோமே ...
மிஞ்சிய உயிர்களையும் பாதுகாக்க !
குருட்டு பூனை
விட்டத்தில் பாய்ந்தது போல
சொல்ல முடியா வன்கொடுமை செய்தாய்
ஒரு இனவெறி தாக்குதல் செய்து
என் இனத்தை நீ அழித்துவிடவில்லை
விதைத்து விட்டுஇருக்கிறாய்...
புலி பதுங்குவது பயத்தால் அல்ல
பாய்வதற்காக !...
வீறு கொண்டு எழுவோம் ...
ஈழம் வீர(ம்)ன் விதைத்த மண் !...