கல்லூரியும் பேருந்தும்!

(கல்லூரி வாழ்க்கையை ஒரு பேருந்துப் பயணமாக யோசித்தால்...)

இனிமையான இந்தப் பேருந்தில் ஏறினோம்
எல்லோரும் சேர்ந்து, மூன்றாண்டுகள் முன்பு...

எத்தனை சந்தோஷ ஸ்டாப்பிங்குகள் இதில்!
எத்தனை சோக விபத்துகள் கண்டோம் நாம்!

ப்ரொபசர் எனும் கண்டக்டர்கள் மாறினாலும்
ஸ்டுடென்ட் பயணிகள் நாம் மாறவேயில்லை!

செக்கிங் செய்ய தேர்வுகள் வந்தாலும்,
படித்துத் தேறி டிக்கெட் காண்பித்தோம் நாம்!

வண்டி சென்ற இடங்கள்தான் எத்தனை! எத்தனை!
கல்லூரி வளாகம் ஆரம்பித்து...
நூலகம்,
உணவகம்,
கிரிக்கெட் கிரௌண்ட்,
ஆடிட்டோரியம்,
என் வீட்டு வாசற்படி,
உன் வீட்டு மொட்டை மாடி,
சினிமா தியேட்டர்
என இன்னும் நிறைய உண்டு,
வண்டியின் ட்ரிப் ஷீட்டில் எழுதப்படாத இடங்கள்...

சட்டென்று "சடன் ப்ரேக்",
அடித்ததும் திரும்பினால்,
பெட்ரோல் காலியாம்...
மூன்றாண்டுகள் முடிந்ததாம்!

நாளைக்கு "பேர்வெல்"...ம்ம்ம்
இறங்கித் தள்ள முடியாது
இந்த "கல்லூரி வாழ்க்கை" எனும் பேருந்தை!

எங்களுக்கு இந்த வண்டியில் இனி இடம் இல்லை!அடுத்த பயணத்திற்கு ஆயத்தமாகிவிட்டனர்
இப்போது ப்ளஸ் டூ பாஸ் செய்த புதுப் பயணிகள்!

பயணித்ததர்க்கு நினைவாக,
சில பரிசுகள் கிடைத்தன!
ஒரு பட்டமும்
சில நண்பர்களும்
பல "நெஞ்சைப் பிழியும்" நினைவுகளும்!

போலாம் சார்... ரைட் ரைட்!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (8-Jan-12, 7:44 pm)
பார்வை : 375

மேலே