உழவர்களை போற்றுவோம் நண்பர்களே வாருங்கள் !
இன்று !
உழவர்களை போற்றுவோம்
உழவு செய்து
விதை விதைத்து
வியர்வை சிந்தி
தன் நோய் பாராமல்
பயிர் நோய்க்கு மருந்திட்டு
தனி மனிதன்
ஒவ்வொருக்கும் உணவளித்து
உள்ளம் மகிழ செய்யும்
உழவரை போற்றுவோம் !
இன்று !
உயிர் இழந்து
தேய்ந்து வரும்
உழவுக்க்காகவும்
உழவர்களுக்காவும்
நதி நீரை
தேச நீராக்கி
தேசம் முழுவதும்
உழவுத்தொழில் வளர்ந்திட
உழவர்களை போற்றுவோம் !
இன்று !
நிலத்தில் விவசாயம்
செய்ய இடம் இல்லையா
வருந்தாதிர்கள்
விண்ணிலே
விதை விதைத்து
விவசாயம் செய்து
விந்தை உலகை
நம் தேசம் நோக்கி
திரும்ப செய்வோம்
வாருங்கள் !