தைப் பொங்கல் !

இந்த தைப்பொங்கல்
தமிழரின் திங்கள்
தரணியே போற்றும்
பொங்கலோ ! பொங்கல் !!

செங்கரும்பு , தளிர்மஞ்சள்
செப்புடன் நல்ல மண்பானை
புத்தாடை உடலில் பூண்டு
பொங்கி வரும் பொங்கல் நாள்

செந்நெல் கதிர் அறுத்து
மணி அரிசியில் வெல்லம் கூடி
தித்திக்கும் பொங்கல் அது
தமிழன் பெருமை பார் முழுதும்

தைப்பொங்கல் !
தமிழரின் திங்கள் !!

பொங்கல் வாழ்த்துக்களுடன் .............

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (13-Jan-12, 11:43 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 381

மேலே