வீரம் கொண்ட மாட்டுப்பொங்கல் !

உழவர் பெருமகன் உரிமையோடு
ஏற்றம் கொள்ள மாட்டுப்பொங்கல்

வாழ்வு தந்த உயிர்களுக்கு - இங்கே
வாழிப்பாக அலங்கரித்து - மின்னும்
சீவிய கொம்பில் பொன்னை சுற்றி
தமிழ் வீர திருமகனுக்கு தீரனாக
விடை சொல்லும் மாட்டுப்பொங்கல்

திறன் கொண்ட தோள் திமிர
சீறி வரும் காளை அடக்க
வீர தமிழன் விளையாட்டில்
கிராமங்களுக்கு ஒரு புது தெம்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
ஆண் மகனின் வீரம் தொட்டு
அடங்காத காளைகளையும்
அடக்கிடுவார் தம் வீரம் கொண்டு

தமிழன் சரித்திரத்தில் ஒரு நூறு
வருடம் தோறும் இந்த வரலாறு !!

வாழ்த்துக்களுடன் உங்கள் ............

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (13-Jan-12, 12:15 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 860

மேலே