!!! புள்ளி !!!

நான் பிள்ளையார்சுழி
போட்டேன் - நீ
முற்றுப்புள்ளி வைத்தாய்!
நிருத்தர்க்குரிகளுக்கும்
தொடர்ப்புள்ளிகளுக்கும்
ஆச்சிரியக்குரிகளுக்கும்
அவசியமே
இல்லாமல் போய்விட்டது
நம் கதையில்...
!!!
கோலத்திற்கு மட்டுமல்ல
காதலுக்கும்கூட
உன்னால்
முற்றுப்புள்ளி
வைக்கமுடியுமென்று
இப்பொழுதுதான்
தெரிந்துகொண்டேன்...
!!!
வானத்தில்
யார் வைத்தது
முற்றுப்புள்ளி?

,,நிலா,,
!!!
நீ அழகாய் - உன்
நெற்றியில் வைத்திருக்கும்
பொட்டை - நான்
அதிகமாய் ஆசைப்பட்டு
விரும்பி ரசிப்பதுண்டு
ஆனால்
இப்பொழுதுதான்
புரிந்து கொண்டேன் - அது
நீ
என்
ஆசைக்கு வைத்த
முற்றுப்புள்ளி என்று...
!!!
எத்தனையோ கவிதைகளுக்கு
முற்றுப்புள்ளி
வைத்திருக்கிறேன்
ஆனாலும்
வைக்கவே முடியவில்லை
வாழ்க்கைக்கு ஒரு
அர்த்தப்புள்ளியை...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (13-Jan-12, 12:33 pm)
பார்வை : 276

மேலே