நம்மிடம் இல்லாதது

நான்
தவறி
விழுந்த
விதை அல்ல!
விளைய்கின்ற நிலம்.
.
நான்
நாளை வரும்
கதிரவன் அல்ல!
இன்று
உதித்து மறைந்த
சூரியன்.
.
நான்
நினைத்ததை
எல்லாம்
எழுதும்
பேனா அல்ல!
எழுதியதை படிக்கும்
காகிதம்.

நான்
கரையோடு நிற்க
கடலும் இல்லை,
யார்
கண்ணையும் மீறிவரும்
கண்ணீர் துளி.

நான்
மூச்சுக்குள்
அடைபடும் காற்றுமில்லை,
மூங்கிலின் துளைக்குள்
தப்பிவந்த
தாளம்.

நிறம் மாறும் வானம் அல்ல!
நிறம் இல்லாத நீரும் அல்ல!
நிலைமாறும் மனிதன் அல்ல!

நான் யார்?

! நம்பிக்கை !

எழுதியவர் : ச.நாகராஜன் சமுத்திரம் (19-Jan-12, 12:04 am)
சேர்த்தது : S.Nagarajan
பார்வை : 299

மேலே