திருடப்படும் உண்டியல்கள்..!!
எங்களூர் கோவிலில்
உண்டியல் திருடுபோனது
திருடனைப் பிடிக்க
விரைந்தது தனிப்படை
உண்டியலின் வழக்கமான
வருமானத்தைவிட
இருமடங்கு செலவில்...
திருடன் பிடிபட்டான்
திருடியது பூசாரியே...
தினந்தினம் படைக்கும் பூசாரியை
பட்டினிபோடும்
தெய்வம் என்ன தெய்வம்..?
பூசாரியின் தட்டை வெறுமையாய்விட்டு
உண்டியலில் மட்டும் காசுபோடும்
மக்கள் என்ன மக்கள்..?
இதை நடைமுறையில் பார்த்திருக்கும்
அரசு என்ன அரசு..?
உண்டியல் பொதுவானதா?
உண்டியல் காசுபோதுவானதா?
திருட்டு பொதுவானதா?...
எல்லாம் பொதுவானதே
எல்லாமும் பொதுவானதே...
பொதுவானவை திருடப்படும்
சுயநலமிகள் பொதுவில் உள்ளவரை...
பொதுவானதெல்லாம் திருடப்படுமே
பொதுவானவர்கள் விழிக்காதவரைக்கும்..
திருடப்படுவதெல்லாம் பொதுவானதாகும்
பொதுவானவர்கள் விழிப்போமானால்..!!