ஆடுறாளே ! ஆடுறாளே !

நம்ம நாட்டுல
எழுபது கோடிப் பேருக்கு
கழிப்பிடம் இல்ல
அவன் அவன் அங்க அங்க
கருவ மரத்துக்கு
உரம் வச்சித் திரியிறான்...
இதையெல்லா பார்த்த பின்பும்
அவா டிஸ்கோ டான்ஸ் ஆடுறாளே

பொதுத்துறையயெல்லாம்
தவிடு பொடி ஆக்கிட்டாக
இதையெல்லாம் பார்த்துப்புட்டு
அவா குலுங்கி குலுங்கி ஆடுறாளே

உரம் வில எகிறிட்டதால
தினமும் நாற்ப்பத்தேழு விவசாயி
தற்கொலை செய்துக்கிறா
இதையெல்லாம் பார்த்துப்புட்டு
அவா ரிக்கார்டு டான்ஸ் ஆடுறாளே

எண்பது கோடிப் பேரு
வறுமையில் உழலுறாக
கஞ்சிக்கு வழியின்றித் தவிக்கிறாக
இதையெல்லாம் பார்த்த பின்பும்
அவா பிரேக் டான்ஸ் ஆடுறாளே

மூழ்கடிக்கும் தங்கம் வில
முனங்க வைப்பதால
பெண் குழந்தை பிறந்ததுமே
நெல் விதைய ஊட்டுறாக
இதையெல்லாம் பார்த்துப்புட்டு
அவா இளிச்சு இளிச்சு ஆடுறாளே

அவுக அமெரிக்காவோட
கை கோர்த்துத் திரியுராக
அமெரிக்க ஆணைக்கு
கட்டுப்பட்டு நடக்குறாக
இதையெல்லாம் பார்த்துப்புட்டு
அவா கும்பம் வச்சி ஆடுறாளே

கலாச்சாரத்த சீரழிச்சு
கவர்ன்மென்ட் நடத்துறாக
இதையெல்லாம் பார்த்த பின்பும்
அவா டிஸ்கோ டான்ஸ் ஆடுறாளே

அவா அவான்னு சொல்லுறேனே
அவா யாருன்னு நீங்க கேட்கலியே
அவாதான்
நம்ம ஜனநாயகம்

எழுதியவர் : பொற்செழியன் (22-Jan-12, 2:06 pm)
பார்வை : 213

மேலே