நட்சத்திரம்

ஆகாயத்தில் ஏற்றப்பட்ட
அணையா விளக்கு....

கருப்பு நிற வானில் அள்ளி வீசப்பட்ட
வெண்ணிற பூக்கள்...

இறக்கை இல்லாமல் பறக்கும்
மின்மினி பூச்சிகள்....

நிலவின் தோழிகள், பிரபஞ்சத்தை
சுற்றும் அழகிகள்...

கோலமிட முடியாத
வெண்புள்ளிகள்....

இரவில் கண் சிமிட்டி பகலில்
மறைந்து போகும் மாயக்காரி....

பிரியா

எழுதியவர் : பிரியா (23-Jan-12, 7:47 pm)
பார்வை : 388

மேலே