ஜாதியின் கொடுமை

மகராசி பெத்த மகா
பொன்னுத்தாயி அவா பேரு
போக்கிரி கண்ணாலே
புலம்ப வச்சுப்பிட்டா
காதல் மொழி பேசி
ஏ மனச அள்ளிப்புட்டா
மண்வெட்டி கண்ணாலே
மனச கொத்திப்புட்டா
சாதிய பாதுகாக்க
அவா அப்பன்
ஆளான அவளையும்
ஆட்கொல்லி வந்தவனுக்கு
கண்ணாலமும் செய்துப்புட்டா
வாழ்க்கை கோலம் கலஞ்சிடுச்சே!
வசந்த காலம் ஒழிஞ்சுடுச்சே!
வாழ்க்கை பயணம் முடுஞ்சுடுச்சே!
புலம்புறாளே பொன்னுதாயி
என்ன சொல்லி நா அழ
சாதி வெறி தீரலியே!
சமுதாயம் திருந்தலயே!
புலம்புராளே பொன்னுதாயி
என்ன சொல்லி நா அழ
ஏ மனசு தாங்கலியே!

எழுதியவர் : பொற்செழியன் (30-Jan-12, 9:49 pm)
பார்வை : 330

மேலே