"தானே" தாக்கத்தை தாங்கலையே எமனசு !

இலை அறக்க போகயில
தலைகோதி ஆசிர்வதிச்ச
குலைஈண்ட வாழைங்க
இன்று “தானே”வால் கொலையுண்டு
கிடக்கயில கேட்கலயே என்மனசு

ஆறுவகை மாங்காய ஒரு மரத்துல
பறிக்க எண்ணி ஆறுமர குருத்தெடுத்து
ஒட்டுகட்டி எங்கப்பன் வளர்த்த மரம்
அத்தனையும் வேரோட சாஞ்சிப்போச்சி

முழுபரீட்ச விடுமுறையில
எஆத்தா பறிச்ச முந்திரிக்கு
காவல் இருந்து நான் ஏறி விளையாடிய
குடிமுந்திரி இன்று அடியோடு சாஞ்சிபோச்சு

நட்டுவச்சி நெடுநாளா நீரிட்டு
பாத்து பாத்து வளர்த்த பலாமரம்
அத்தனையும் தோப்பாக பூபூத்து
காய் காய்க்கும் நேரத்துல
என்ன மட்டும் தனிஆளா
விட்டுபுட்டு நேத்து வந்த காத்தோட
கைகோர்த்து போயிடுச்சு

நட்டமரம் அத்தனையும்
பாதியில போகையில
தாங்கலையே எமனசு !

எழுதியவர் : சத்தியன் (31-Jan-12, 3:50 pm)
பார்வை : 244

மேலே