பகைமையை விலக்கி நண்பர்களாக்கு!
இறைவா! என்னைப் பகைப்பவர்க்கு
தீமையை விலக்கி நல் இதயத்தை கொடு!
இறைவா! அவர்கள் சிறுமைப்படுத்துவது
என்னை மட்டுமல்ல! அவர்களையும்தான்!
இறைவா! தன் வினை தங்களையும் சுடும்
என்பதை அவர்களை உணரச் செய்!
நம் உறவுகள் ஒருவரை ஒருவர் சார்ந்தது
நாம் விதைப்பதுவே அறுவடை செய்கிறோம்!
இறைவா! நான் அவர்களை
நேசிப்பதைப் புரிந்து கொள்ளட்டும்!
இறைவா! என்னைப் பகைப்பவர்களை
பகைமையை விலக்கி நண்பர்களாக்கு!