ஆறு ஓடட்டும்

சந்திக்கவும் மறுத்துவிட்டு,
சிந்திக்கவும் இயலாமல்நின்று,

நிந்திக்கவும் மனமின்றி,
எந்திக்கவும் முடியாமல்,

விந்திக்கிறாய் வந்ததிக்கில்
திரும்பிக்கொண்டே, குழம்பி.

காதலைத் துறந்துவிட்டேன்,
நட்பினை முழுதாய் நிரப்பிக்கொண்டே.

கடமையை முடித்த திருப்தி,
இனி ஆண்டாறு ஓடவேண்டும்.

மனதினில் பாரமுமில்லை,
மறுமுனை பற்றின கவலையுமில்லை.

காட்டாற்று வெள்ளமாய் ஓடுகின்றேன்,
அணைத்துக்கிடக்க ஆருக்கும் ஆர்வமுல்லை.

அன்பினில் கட்டுண்டு கிடக்கிறேன்,
கவலைகளனைத்தையும் மறந்து நிலையில்.

எழுதியவர் : thee (4-Feb-12, 10:47 am)
பார்வை : 263

மேலே