மெல்ல நடந்து வருகிறாள் என் நிலாத் தோழி
![](https://eluthu.com/images/loading.gif)
மெல்ல வீசுது மேலைத் தென்றல்
மெல்லத் தூவுது பொன்னொளி
மஞ்சள் வெய்யில்
அந்தி வானின் ஆரஞ்சு வண்ணத் திரை
அழகாய் விரியுது நீல வானில்
அந்த அழகிய வான் அரங்கை அழகு செய்ய
மெல்ல நடந்து வருகிறாள் என் நிலாத் தோழி
வானில் மட்டும் அல்ல மண்ணிலும்.
---கவின் சாரலன்