விடை தொலைந்த வினா

pizza வை கொறித்து கொண்டு ..
முகம் சுழித்து நாட்டை பற்றி குறை கூறும் பாணியில் இருந்தே யூகித்தேன்..
அவர்கள் foriegn return என்று ...

குழந்தையாய் ஒரு பிஞ்சு புன்னகை செய்ய ...
எங்கோ எதையோ நோக்கி தாயை கேட்டது..
வூ இஸ் ஹி மம்மி!!!

ஹி ஸ் எ பொஎட்(poet) ..என்று தாய் கூற...

ஏதோ கேட்க நினைத்தவனாய் அவன் மேலும் வாய் திறக்க...
நாட்டின் மேல் இருந்த கோவத்தை பிள்ளையின் மீதும் காண்பித்தாள்...

யாராஇருக்கும் என்று நான் அந்த படத்தை எட்டி பார்க்கும் போது..
தாடியும் மீசையுமாய் சாந்தமாய் சிரித்தார் வள்ளுவர்....

எங்கோ எதிலோ சுஜாதா அவர்கள் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்தன...
'திருக்குறளா??இந்த யுகத்தில் அவை எல்லாம் நம் நாட்டில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள்...'

அவர் எழுதியது மெய்யாகிவிடுமோ என்ற அச்சத்தில் ...கனத்த நெஞ்சோடு வெளியில் நடந்தேன்...

எழுதியவர் : சரண்யா சக்திகுமார் (8-Feb-12, 1:28 am)
சேர்த்தது : SaranyaSaktikumar
பார்வை : 365

மேலே