பேசு நல்லா பேசு...
அன்பா பேசுங்க ஆசையா பேசுங்க
கோவமா பேசுங்க கொஞ்சலா பேசுங்க
காரமா பேசுங்க இனிப்பா பேசுங்க
விடாம பேசுங்க விட்டுவிட்டு பேசுங்க
வசனமா பேசுங்க வாழ்த்தா பேசுங்க
பேசுங்க நண்பர்களே நல்லா பேசுங்க
நீங்க பேசுறது கேட்கரவங்களுக்கும்
நல்லது செய்யுமுன்னா நல்லா பேசுங்க
உங்க வார்த்த நல்லத செய்யவைக்குமுன்னா
உங்க வார்த்தையால நாடு முன்னேருமுன்னா
உங்க வாய்சொல் நல்லத சொல்லுமுன்னா
எங்க நின்னு வேண்ணாலும்
உங்க விருப்பபடியெல்லாம்
நல்லா பேசலாமே நாளும் பேசலாமே..!!