ஜப்பான் காரன் வந்துட்டான்

உள்ளுக்குள்ளே உழைப்பை வச்சி
உல்லாசமா சிரிச்சி சிரிச்சி - நம்ம
ஊருப் பக்கம் வந்தானுங்க
உருண்டு திரண்ட ரெண்டு சப்பான் காரனுக...!

தஞ்சாவூரு பக்கம் வந்து
தங்குனாணுக ஜாமீன் ஊட்டுலே...!
சுத்திப் பாத்தான் சோழன் கோயிலை
சுகவாசியா நேரம் கழிச்சான்...!

கரும்புத் தோட்டம் கரும்பை வெட்டி
கரிசனமா தின்னக் கொடுத்தார் ஜமீனு..!
கடிச்சி ரசிச்சி பத்து நாளா தின்னு தின்னு
கருணை கண்டு நன்றி சொன்னான்...!

புறப்பட்டு போகும்போது ஜப்பான் காரன்
புன்னகைத்து ஒரு சேவலும் பர்சும்
பணக்கார ஜமீனுக்கு பரிசாக கொடுத்தானே
பட்டுபோன்ற பரிசு பார்த்து கேட்டார் ஜாமீன்

எப்படி இது சாத்தியம் உங்கள் ரூமில் எதுவும் இல்லை எப்படி செய்தீர்கள் ? என்று !
கடிச்சி தின்ன கரும்புக் சக்கையில் பொன்
கலர் நிறத்தில் சேவல் செய்தோம்

அது சரி கரும்புத் தோலை என்ன செய்தீர் ?
அது வந்து கறுப்புக் கலர் மனிபார்ஸ்
அழகா உங்க கையில இருக்கு பாருங்க..!
அதிசயித்தார் ஜமீனு அப்பப்பா என்ன உழைப்பு ?

எத்தனை சுனாமி எத்தனை குண்டு வெடிப்பு
எழுந்து நிற்கிறாய் அசராமல்...!
எங்களுக்கும் கற்றுக் கொடுப்பா
எப்படி உழைக்க வேண்டும் என்று...!

எழுதியவர் : (10-Feb-12, 9:37 am)
பார்வை : 199

மேலே