புதுக்கவிதை- மக்கள்
சுதந்திரச் சுடரைச்
சுற்றி விழும்
விட்டில்கள்!
அரசியல் விளக்கினை
அணையாது வைக்கும்
எண்ணெய்த்துளிகள்!
ஜனநாயகத் தாமரை
வளர உதவும்
சகதி நிலம்!
சமுதாய
வளர்ச்சிப் பண்பாடும்
அரசியல் வண்டுகளிடம்
இருக்கின்ற தேனையும்
கொடுப்பதற்கு மலரும் பூக்கள்!
சுயநலத் தாரகைகள்
கூத்தாடிப்
பொதுநல நாடகம் நடத்த
மேடையாகவும் இருந்து
பார்வையாளராகவும் இரசிக்கும்
தெய்வங்கள்!
சர்வாதிகாரிகளின் எதிரே
தடைச்சுவர்கள்!
ஜனநாயகக் கலைத்தேரின்
வடக்கயிறுகள்!
-௦-