இனிய உளவாக இல்லாது கூறல்

நீயெல்லாம் ஒரு மனுசனாடா ?
பொட்டச்சிய போட்டு அடிச்சே கொல்றியே !
அழுது கதறி கத்தி - மனைவி கணவனிடம் !

ஏட்டி எங்க ஆத்தாள எதாச்சும் சொன்னே
மவளே வெட்டிப் பொளந்துருவேன்
வாய மூடு நாயே - கணவன் மனைவியிடம்..!

டேய் அந்த அடங்காப் பிடாறிய
அடிச்சி நொறுக்கி அடக்கி வையிடா
அகம் புடிச்சவ எப்படி திமிருரா பாரு
ஆவேசத்தோடு இது - மகனிடம் பெற்றோர்...!

எப்பே....அம்மாவ அடிக்காதீங்க எப்பே...எப்பே
அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் இது -
ஆறு வயசுக் குழந்தை பெற்றோரிடம்

இனிய உளவாக இன்னாது கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

என என் தமிழ் தேர்வுக்கு நான்
எழிலான திருக்குறளை மனனம் செய்தேன்..

பக்கத்து வீட்டு சண்டை சத்தம்
நடைமுறையில் அந்தக் குரலில் பொருளை
நன்றாகவே எனக்கு சொல்லிக் கொடுத்தது..!

எழுதியவர் : (10-Feb-12, 9:23 am)
சேர்த்தது : ரஞ்சிதா
பார்வை : 228

மேலே