சிலிர்ப்பு

அதிகாலை குளிரில்
அழகாக குளித்து - என் மனைவி
அவள் கூந்தல் உதறும் சாரல்
என் முகத்தில் " சிலிர்ப்பு "

அதே மனைவி
அர்த்த ராத்திரியில் அவளோடு நான் செல்லாத
அந்த ரெண்டு சினிமா டிக்கட் பார்த்து
அபாயகரமாய் முறைப்பது
என் பிடரிக்குப் பின் " சிலிர்ப்பு "

கிளு கிளுப்பிலும் அவள்
ஒரு சமயம் தேவதை
மறு சமயம் பிசாசு

எழுதியவர் : (10-Feb-12, 1:55 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 165

மேலே