சிந்தனையில் தெளிவு வேண்டும்
கர்ப்பக் கிரகத்தில் சாமி கும்பிட நின்றேன்..!
கடவுள் மீது இருந்த பயத்தை விட
கண்கானிக்கிறதோ என் அழகை
கண்ணுக்குத் தெரியாமல்
கருமம் பிடிச்ச செல்லோ கேமராவோ?
கவனம் சிதறுகிறது !
கடவுளே இந்த கலிகாலத்திலிருந்து
காப்பாற்றி விடு என்னை....!
குங்குமம் எடுத்துச் செல்ல
கொஞ்சமாய் அங்கிருந்த செய்தித்தாளை
கிழிக்கும் போது.....கோயில் அர்ச்சகர் செய்தது
குலை நடுங்க வைத்தது.........
உடலை சுற்றி மூடிக் கொண்டேன்.....!
உள்ளம் அசிங்க மாகி விட்டதே - அதை
உண்மையில் எங்கு கொண்டுபோய்
உரசி நான் கழுவிக் கொள்ள...?
ஏன் இந்த அசிங்க எண்ணம் எனக்குள்ளே...?
ராமாயணம் சொன்ன பாட்டி செத்து விட்டாள்
சிவபுராணம் சொன்ன தாத்தாவும் இல்லை
தனி அபார்ட்மென்ட் வாழ்க்கை இன்றைய
செய்தித் தாள் நிகழ்வுகள் தொலைகாட்சி
என்னை இந்த நிலைக்கு ஆக்கி விட்டதா ?
குழம்பிக் கொண்டிருந்தது
கண்ணாடிக்குள் என் உருவம்...!