என் காதல்
என் அன்பு வளர்கிறது
உன் அன்பைத் தேடுகிறது
என் தேகம்
உனைத் தொடர்ந்து
மைல்களாய் நடந்தாலும்
நீயோ தொலை தூரம்
வானத்தைப் போல
நம் தூரமும் வளர்கிறதோ...
வெள்ளி நிலவே
தங்கமாய் ஜொலிப்பதாலோ
நாளொருமேனியும்
என் காதல் வளர்ந்து
உன் காதல் தேடுகிறதோ
தங்கம் போல்
கிட்டாமல் போய்விடுமோ
காதல் ஏழையானதால்
ஒரு தலையாய்....