முதல் காதல்! முதல் காதல்!!

முதல் காதல்! முதல் காதல்!!
அப்படிஎன்றால் என்ன?

அன்பான ஈர்ப்பு என்றால்
முதல் காதல் அம்மாவிடம்தானே!

ஆதரவான நெருக்கம் என்றால்
அது அப்பாவிடம்தானே!

பருவ வயதில் வருமென்றால்
பள்ளியில் பயிலும் பெண்ணிடம்தானே!

புது மனைவிடம் கொள்ளும் தீராத
அன்புக்குப் பெயர் காதல்தானே!

வயது முதிர்ச்சியில் தம்பதியர்
கொள்ளும் பிரியத்தின் பெயர்
தொடரும் காதல்தானே!

இனக் கவர்ச்சிக்கு மட்டும்தான்
முதல் காதல் என்று பெயரா?

இளைய தலைமுறையினரே
சொல்லுங்கள்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-12, 1:33 pm)
பார்வை : 224

மேலே