இரக்கம் காட்டுங்கள் ....
நீண்ட தூர
பயணத்திற்காக
பயணிக்க
எத்தனித்தேன் .....
பேருந்தில்
ஓர் நாள் ....
இரண்டொரு
இருக்கைகள் தவிர்த்து .....
சென்றமர்ந்தேன்
ஜன்னலோர இருக்கையொன்றில் ......
இதமான இளங்காற்று....
இதயம் தொடும் குளிர்காற்று .....
என் மீது பட்டது ....
என்னுள் புதைந்திருந்த
ஞாபகங்கள்.......
பூக்கள் என
தளிர் விட்டது .....
ஆழ்ந்த சிந்தனையில் ...
அயர்ந்து நானிருக்க ....
என் தூக்கம் கலைத்தது
ஓர் துக்கமான சிறுமியின்
குரல் ......
அம்மா .......
அப்பா ....
அண்ணா ....என்று !
ஆடையை பெயரளவில்
உடுத்தி ....
வறுமையை அவள்
உடல் முழுதும் காட்டி ......
தள்ளாடி வரும் சிறுமியை
கண்டுகொள்ள யாருமில்லை .....
கண்களால் கண்டு களிப்பதை தவிர
அவர்கள் வேறெதுவும் செய்யவில்லை ......
என் அருகே அவள் வர வர ...
பாக்கெட்டில் வைத்திருந்த பத்து ரூபாய்
ஏனோ கணத்தது.....
பாறாங்கல்லாய் .....
கை நீட்டிய சிறுமியிடம்
தருவதற்கு ஒன்றுமில்லை
என்னிடம் .....
பாசத்தையும் ....
பத்துருபாயையும் .....
தவிர ....
பத்து ரூபாயை....
பட்டென அவளிடம்
தந்தேன் ......
பல கிலோ மீட்டர்
நடந்தே வீடு
வந்தேன் .....
இரவுகள் வெள்ளையாக ...
தூங்கும் என் நண்பர்களை
எழுப்பினேன் .....
நான் .....துங்காதிருக்கும்
நிலையை சொல்லி
விளக்கினேன் .....
நள்ளிரவு தாண்டிய
என் கேள்விகளின்
விடையாய்......
விடிந்தது என்
இரவு மட்டுமல்ல .....
என் தூக்கம் கலைத்திட்ட
சிறுமியின் வாழ்க்கையும் தான் ....
ஆம் ! இன்று அவள்
பல மனிதாபிமானம் மிக்கவர்களின் ......
அகத்தால் ....
படித்துக்கொண்டிருக்கிறாள் ....
குழந்தைகள் காப்பகத்தில்
(பள்ளியில் ).....
என் கேள்வியெல்லாம்
இது தான் ...
அவளைபோல் இன்னும்......
எத்தனை பிள்ளைகள் ...
அவர்கள் அனுபவிக்கும்
எண்ணிலடங்கா தொல்லைகள் ......
இதுபோன்றவர்களை
நீங்கள் காண நேரிட்டால் .......
இரக்கம் காட்டி ......
கையில் இருப்பதை
கொடுப்பதை விட ......
இதயம் கூட்டி
அவர்களின் உண்மை
நிலைமையை அறிந்திடுங்கள் .....
முடிந்தால்
அவர்களுக்கு
புது வாழ்வு கொடுக்க ....
முயன்றிடுங்கள் ......
அன்புடன் ....
ப.ராஜேஷ் .....