பூக்களோடு பேசி திரிந்த காலம் . . .

பூக்களோடு பேசி திரிந்த காலம் . . .

புன்னகை செய்தே
புத்தியை மாற்றி விட்டாள்
புரியாத உலகிற்குள்
புக செய்தாள்

என்ன புண்ணியம் செய்தேனோ ?
என்னவள் என்னை ஏற்று கொள்ள !
என்றும் அவளுடன் இருப்பேன்
என் உயிராக பார்த்து கொள்ள ..!!

கண்களால் கண்ட காதல்
கண்ணீர் போல் கரைந்துவிடும் ;
இதயத்தை கண்ட காதல்
இறந்தாலும் உயிர் வாழும் !!

காயங்கள் கண்டாலும்
கண்ணீர் கொண்டாலும்
காதலினை பிரிந்திட இயலுமோ ?
கொண்ட
காதலை மறந்திட இயலுமோ ??

என்னை மேய்ந்திடும் உனது கணங்கள் ;
உன்மேல் சாய்ந்திடும் எனது தோள்கள் ;
உன்னை பார்க்கையில் -
காதல் மின்சாரம் பாய்ந்திடும் !
உன்னை பிரிகையில்
உள்ளம் சோக தீயில் மாய்ந்திடும் !!

உனது சிரிப்பினில் சிதறிய
சிற்பியின் முத்துக்கள் -என்
சிந்தனையை சிதைக்கும்
சீரான சிறை கம்பிகள் !

மேல் உதடு நான்
கீழ் உதடு அவள் என்றேன்
அதனால் தான் என்னவோ
அதில் கூட நங்கள் பிரிந்து விட கூடாதென்று
என்னுடன் பேசாமல் இருந்துவிட்டாள் !

அந்த பூவோடு பேசிய காலங்கள்
இன்னும் மணம் மாறாமல்
காதல் மனம் மாறாமல்
இனிமையாக இனிக்கிறது ..!!!

எழுதியவர் : ansari (17-Feb-12, 4:04 pm)
பார்வை : 212

மேலே