பின்னாளில் ஒரு நாள்..

இவை எல்லாம் சாத்தியமா?
எனும் கேள்வி மட்டுமே மிஞ்சியிருக்கும்...
இனிவரும் உலகில்
எதுதான் சாத்தியமில்லை...!!

வயதாகி ஓய்வூதியம்
பெரும் கடவுள்...!
புதிதாக வணங்க
இன்னொரு இளைய கடவுள்..!!

பிள்ளைகள் படிக்க
நிலவில் ஒரு பள்ளி!!
தினமும் இருவேளையும்
வந்து செல்லும்
நிலா பள்ளி பேருந்து..!!

புதன் கிரகத்தில்
புளியமரம் நடும் விழா..!
நெப்டியூன் வரை
நீர் தேடும் முயற்சி...!!

தமிழக சட்டபேரவையில்
மெட்ரோ ராக்கெட் திட்டம் தாக்கல்..!
லஞ்சமில்லா தமிழக அரசு..!!

நவீன காதல் திருமணங்கள்..!
சாதிமத பேதமில்லா
கூட்டு உறவு மனிதம்...!!
ரேஷன் கடைகளில்
பீட்சா, பர்கர்..!!

இயந்திர முதலாளியிடம் இருநூறு
மனிதர்கள் தொழிலாளிகளாய்..!!
கையெழுத்து போட்டு
சம்பளம் வாங்கும்
நவீன கடவுள்கள்...

சிலை இருக்கும்
மூலஸ்தான கருவறைக்குள்
வலை தொடர்பு (இன்டர்நெட்) கம்ப்யூட்டர்..!!

பாக்கெட்டில் தாய்ப்பால்...
பகுத்தறியும் அரசியல்வாதி..
பங்குசந்தையில் தமிழகம் முதலிடம்..!!

கற்பழிப்பு, கொலை, கொள்ளை
எனும் வார்த்தை கூட
பல வருடத்தின் முன் பதித்த
செய்திதாள்களில் வெறும் சாட்சியாய் ..!!

டாக்டர் முன் அமர்ந்து
கர்ப்பம் தரித்த
பதினான்கு வயது பெரியமனுஷி,
பாப்கார்ன் கொறித்து கொண்டே,
" இன்னைக்கே கலைத்து விடுங்கள்
நாளை exam இருக்கு..! " - என்பாள்...!!

இவற்றில் எதுதான்
சாத்தியமில்லை....

மாற்றம் எனும் வார்த்தை மட்டுமே
மாறாமல் வாழும்...!!
மாற்றத்திற்கு உடனே தயாராகு....!!! .

எழுதியவர் : கவி மணி (17-Feb-12, 4:49 pm)
பார்வை : 217

மேலே