இனிமை
இனிமை என்பது
இதழின் சுவையில் இல்லை
இதயப் பலாச் சுளை எண்ணங்கள்
இன்சொல்லாய்
இனிக்கையில் இருக்கிறது........
வார்த்தை ஜாலமென்ற
வண்ண பூச்சுக்களில்
இல்லை இனிமை....
வாழ்வுக்கு வழிகாட்டும் - நல
வார்த்தைகளில் உள்ளது.....
சுமையை பகிர்வது
இனிமை இல்லை
சுமை குறைக்க வழி சொல்லி
சுத்தமாய் சிந்திக்க வைப்பது
இனிமை