உணர்வை மிஞ்சிய நேயம் .........

தமிழுக்கும் காதல் உண்டு
தமிழனுக்கும் காதல் உண்டு
சங்கத்தமிழ் வளர்த்த காதல்
சரித்திரம் படைத்த காதல்
சாகாவரம் பெற்ற காதல்

ஆனாலும் நண்பா!
நேயம் சார்ந்ததுதான் காதல்
நிலையற்றது அல்ல காதல்
இதுவே சங்கத்தமிழ் காட்டும் உண்மை

மனதுக்கு இதம் தரும்
மரங்கள் சூழ்ந்த கானகம்
அங்கே அப்போது
ஒரு மரத்தடியிலே
தலைவன் ஆழ்ந்து துயில்கின்றான்

தலைவனைக் காணாது தவிக்கிறாள்
ஓடுகிறாள் தேடுகிறாள்
ஒய்யாரமாய் பாடுகிறாள்
தலைவனை மடியில் படுக்க வைத்து
மாங்கனிகளை சுவைப்பதை பார்க்க
அவளுக்கு அத்தனை ஆசை

இறுதியில் தலைவனைக் கண்டாள்
ஆழ்ந்த உறக்கத்தில் அசையாதிருந்தான்
அவனை நோக்கிச் செல்ல முயற்சித்தாள்

திடீரென அவள் பார்வை
அடுத்த மரத்துக்குத் தாவியது
அங்கே மானிரண்டு கண்டாள்
காதல் வயத்தாலே
கண்கள் ஒன்றையொன்று தின்றது கண்டாள்
அன்பொழுகி நின்றது கண்டாள்

தலைவனை நோக்கிச் செல்ல நினைத்தவள்
தங்கச்சிலையாய் அப்படியே நின்றாள்
ஏன் தெரியுமா நண்பா!
நடக்கும் போது சருகின் ஓசையால்
தலைவன் எழுந்தால்
மானை எய்து விடுவானோ! என்ற பயத்தினால்

உணர்வுகளுக்கு இடம் கொடுக்காது
நேயம் காட்டி மானின் காதல் காத்த
மங்கையின் அன்பொழுகும் நேயத்தை
சங்கத்தமிழ் முல்லை நிலக்காட்சியிலே
படம் பிடித்துக் காட்டுதம்மா!

எழுதியவர் : பொற்செழியன் (27-Feb-12, 7:12 pm)
பார்வை : 288

மேலே