என் குழந்தையும் நானும்! (பகுதி எட்டு)

பத்து மாதமெனும்

நீண்டதொரு

சுமப்பின் எல்லையில்

நீ வந்தாய்,




உன்வருகைக்குப் பின்

ஏதும் -

அத்தனை சுமையில்லை

உன் அழுகையை தவிர!




நீ பேசிய

சிரித்த

குறும்பு செய்த

நடக்க ஆரம்பித்த

பல்முளைத்த

என் வெப்பத்தில் உறங்கிய

எதையுமே

பதிவு செய்யவில்லை

நீ காண்பதற்கு;




ஆனால் -

நானில்லாத ஒரு

கணப் பொழுதில்

உனக்கு அத்தனையும்

புரிந்துபோகும் -

எனை நீ தேடும் அந்த தேடலில்

எழுதியவர் : இவண் நகுலேஷ் (29-Feb-12, 12:47 pm)
சேர்த்தது : இவள் அஞ்சலி
பார்வை : 168

மேலே