அந்த நாள்
எல்லாக் கதவுகளும் அடைபட்டன
ஜன்னல்கள் கூட
படிகட்டுகள் என்னை பிடித்துத் தள்ளின
தெரிந்த முகங்கள் திருப்பிக் கொண்டன
உறவுகள் ஒதுங்கின
தானியம் இல்லா வயலில் குருவிகளுக்கு
என்ன வேலை
தனிமையாய் வெறுமையாய்
புதிய கதவுகள் திறக்கும்
ஜன்னல்கள் கூட
படிகட்டுகள் என்னை ஏற்றிவிடும்
பெருமையாய்
திரும்பிய முகங்கள் திரும்பி பார்க்கும்
அந்த நாள் வரும் .