அன்புள்ள நண்பர்களே..
அன்புள்ள நண்பர்களே..
அனைவருக்கும் வணக்கம்.!
எனது எழுத்துக்களை
எப்போதாவது நீங்கள்
எட்டிப்பார்த்தால்..
அதற்கு மிக்கநன்றி..!
ஆனால் தயவுசெய்து
மதிப்பெண் இடவே வேண்டாம்.
உங்கள் மனதுக்குள்
மதிப்புக்குரியதாக இருந்தால்
போதும்..! அல்லது
அவ்வாறில்லாமல்
போனாலும் சரி..!
வருத்தமில்லை..
எனது எழுத்துக்கள்மீது
அதிமான மதிப்பெண்
விழுவது என்மீதே
சந்தேகத்தைக் கிளப்பும்
ஒருவிவாதப் பொருளாகிவிட்டது.
எனவேதான் இந்த வேண்டுகோள்.
என்னைக் குறித்த தங்களின்
புரிதலில் ஏதேனும் தவறு
இருந்தால் அதற்கும்
நானே பொறுப்பு..!
ஏனெனில் சரியான
புரிதலை ஏற்படுத்துமளவில்
என் செயல்பாடில்லை
என்றேநான் நம்புகிறேன்.!
சிலருக்கு வருத்தம்
சிலருக்கு கோபம்
வருவதற்கு இன்று
தெரியும் காரணங்கள்
நாளை இல்லாமல்
போகலாம் என்ற
நம்பிக்கையுடன்
-பொள்ளாச்சி அபி.