ஒரு தாயின் கண்ணீர்.....

உன் வீட்டு மூலையில்.....
ஓர் இடம்...
நீ உண்ணும் சோற்றில்
ஒரு சிறு பங்கு...
உண்ணுகிற வேளையில்
"அம்மா சாப்பிட்டாளா ?"
என மனைவியிடம் வினவும் ..
சிறு வரியில் தெரியும்....
பெரும் பாசம்......
பார்க்கிற போதெல்லாம்
பாசமாய் புன்முறுவல்....
முடியாத நேரத்தில்...
நான் காட்டிய கருணையில்...
இரண்டு சதவீதமாவது.....

இவை மட்டுமே
எதிர்பார்த்தேன் மகனே
உன்னிடம் இருந்து....
நீயோ...
பணம் பறித்து துரத்தி விட்டாய்...
இருந்த போதும்
உன் மேல் கோபம் இல்லை எனக்கு....

என் வளர்ப்பின் பேரில் ஏற்கிறேன்...
எல்லாக் குற்றமும்....
மன்னிக்கட்டும் உன்னை....என்
உற்றமும் சுற்றமும்.....

எழுதியவர் : (9-Mar-12, 1:28 pm)
Tanglish : oru thaayin kanneer
பார்வை : 235

மேலே