அப்பா எப்பா ?
![](https://eluthu.com/images/loading.gif)
வான்புகழ் வள்ளுவன் பாடியது
குறட்பா
கம்பன் பாடியது விருத்தம்பா
இளங்கோ படியது ஆசிரியப்பா
புகழேந்தி படியாதோ வெண்பா
மணிவாசகன் மனமுருகி பாடியது
திரு அருட்பா
சினிமாக் கவிஞன் பாடுவது
பொருட்பா
இங்கே பாடுவதெல்லாம் எப்பா ?
இனிப்பா புளிப்பா கரிப்பா
துவர்ப்பா உவர்ப்பா கசப்பா
இலக்கணம் ஒதுக்கிய
உவப்பா களிப்பா
அப்பா எப்பா ?
---கவின் சாரலன்
கவிக்குறிப்பு:தண்தலை மயில்கள் ஆட ...என்று
கம்பன் பாடினான். நீ பாவலன் நீ பாட வேண்டும்
நான் ஆடவேண்டும் என்று மயில் கேட்குது
நான் கேட்கவில்லை :
அப்பா எப்பா
நான் மயிலப்பா
தேசீயப் பறவை அப்பா
நீ பாடப்பா
நான் ஆடவேண்டுமப்பா