வறுமை.....

வறுமையின் கோரப்பிடியில்
போராடி உயிர் விடும்
மனிதனை கண்டு
எட்டி நின்று பார்க்கிறது - பருந்து
உன்னை தின்பதால்
எனக்கேது பலன் என்று....

எதற்கு எடுத்தாலும்...
மனிதப் பிறவி என்று
மார்தட்டும் மானிடம்
அவதியில் அல்லலுறும்
மனிதனை காக்க வேண்டாமா?

வாழ்கை அரியது - அதை விட
வறுமை கொடியது - ஆதலால்
வாழும் வரை வாழவிட
வாழ்வோரை வாழவைப்போம்....



என்றும் அன்புடன் ....
செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (11-Mar-12, 1:12 pm)
பார்வை : 356

மேலே