சிறுமியின் ஏக்கம் ...
வெளியூரிலிருந்த
அப்பா
வீட்டிற்கு வந்தார் பெட்டியுடன் ...!
அண்ணனுக்கு
புதுச்சட்டை தந்தார் அண்ணா சிரித்தான் ...!
எனக்கு
புதுச்சட்டை தந்தார் நான் சிரித்தேன் ...!
தங்கைக்கு
புதுச்சட்டை தந்தார் தங்கை சிரித்தாள் ...!
வேலைக்காரியின் குழந்தைக்கு
பொம்மை கொடுத்தார்
வேலைக்காரியும் சிரித்தாள் ...!
கடைசியாக
அம்மாவை அழைத்து
பெட்டியை எடுத்துவை என்றார்
அம்மா ... சிரிக்கவில்லை ...!
மனசு வலித்தது
அம்மாவை நினைக்கையில்
கட்டிலில் படுத்தேன்
கனமாய் அம்மாவின் ஏக்கங்கள் ...!
என் புதுச்சட்டையை
திருப்பிக்கொடுத்துவிட்டு
அம்மாவுக்கு ஒரு முழம்
"மல்லிகைப்பூ" வாங்கிவாருங்கலென
அப்பாவிடம்
உபதேசிக்கும் தைரியம் எனக்கில்லை ...!
புதுச்சட்டையை
அணிந்தால் - அம்மா
சிரிப்பால் - இருந்தாலும்
எனக்கு ஏனோ
புதுச்சட்டையை
அனிய மனம் வரவில்லை
அம்மாவை நினைக்கையில் ...!