[161 ] புரியாதவை ...

காதல் ஒரு போதையா?
கற்பும் ஒரு ஆசையா?
கலவி ஒரு யோகமா?
கடந்து செல்லும் பயிற்சியா?
தவறு மிடம் கட்டிலா?
தவறி வீழ்ந்த தொட்டியா?
கருவும் சதை வளர்ச்சியா?
களைந்துவிடல் மகிழ்ச்சியா?
பண்பை இழந்த அச்சமா?
பழகி விழுந்த எச்சமா?
குழந்தை என்ன குப்பையா?
கொட்டுமிடம் தொட்டிலா?
மனிதர் ஆட்டு மந்தையா?
வாழ்வு மரணச் சந்தையா?