முத்த முதலிரவு

வட்டநிலாவை இட்டுவைத்த முகம் ,
பட்டுஇதழ்கள், பொருத்திவிட்ட பிறைகள்,

அரைவட்ட அழகில் உறையிட்ட
கறைகள், திரையிட்ட அற்புத அறைகள்.

அவிழ்ந்து ஆடின அறையுருவினை
மலர்கொண்ட, மருவினில் மயங்கினபின்,

பாதியினைக் கண்டு மீதியினை
மனதினில் கனவாக்கி உருவாக்கம்.

மிச்சமாக்கின இரவை உச்சமாக்கின
நிலையினில் உலர்ந்த உயிர்பரப்பி,

காதலின்கரு விதைத்து, உறவு
முளைத்த கருமையான இரவு.

எழுதியவர் : thee (20-Mar-12, 4:30 pm)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 302

மேலே