அறிவை தேடி
குருவுக்கு வயதாகிவிட்டதால் தனக்கு பிறகு சிஷ்யர்களில் யாரை குருவாக தேர்ந்தெடுப்பது என்பதில் குருவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது தன் சிஷ்யர்களில் இருவரை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு தேர்வுவைக்க நினைத்தார் . அது என்ன வென்றால் 50 ரூபாய் ஒன்றை எடுத்த்க்கொண்டார் ,நூலகத்தில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார் இரண்டிலும் தனது பெயரை எழுதினார் .ஒரு வழிபோக்கனிடம் 50 ரூபாயும் மற்றொரு வழிபோக்கனிடம் புத்தகத்தையும் கொடுத்தார் .ரூபாய் கொடுத்தவரிடம் ஒரு பலம் வாங்கி அதற்கு ஒரு ரசித்தும் வாங்கி வா என்றும் புத்தகம் கொடுத்தவரிடம் நுலகத்தில் வைத்து அதற்கு ஒரு ரசிது வாங்கி வா என்றும் இருவரையும் அனுப்பி வைத்தார்.அதே போல் இரு வழிபோக்கரும் ஒருவர் ரசிதும் பழமும் மற்றொரு வழி போக்கர் நூலகத்தின் ரசிதும் கொண்டு வந்து கொடுத்தனர் .அதை வாங்கிய குரு தனது இருக்கையில் அமர்ந்து தேர்ந்துஎடுக்கப்பட்ட இரு சிஷ்யரையும் அழைத்து எனக்கு பிறகு நீங்கள் இருவரில் ஒருவர் எனது குரு பதவியை ஏற்பீர்கள் ஆனால் அதற்கு ஒரு தேர்வு வைப்பேன் என்றார் .இருவரும் சந்தோஷத்தில் உச்சிக்கே சென்றனர் தேர்வுக்கு சம்மதித்தனர்கள்.குருவே சொல்லுங்கள் என்றனர் .குரு சொன்னார்
"நான் ஒரு புத்தகத்திலும் ஒரு 50 ரூபாய் தாளிலும் எனது பெயரை எழுதி வைத்துள்ளேன் புத்தகத்தை நூலகத்திலும் ரூபாயை அங்காடியிலும் கொடுத்துளேன் . வரும் வெள்ளி கிழமைக்குள் இதில் ஏதேனும் ஒன்றை கொண்டு வருபவர் அடுத்த குரு என்றார்" .
ஒரு சிஷ்யர் நுலகத்திற்கும்
ஒரு சிஷ்யர் அங்காடிக்குக்கும் சென்று உடனே அந்த பணத்தை வாங்கிவிடலாம் .என எண்ணி ஒருவர் ஓடி சென்று
"இப்போது ஒருவர் பழம் வாங்க 50 ரூபாய் கொடுத்தார் அல்லவா
அதை கொடுங்கள் வேறு ரூபாய் தருகிறேன்''என்றார் கடைக்காரரிடம் அந்த சிஷ்யர்
அதற்கு
கடைக்கரர் "ஐயோ இப்போதானே மொத்த வியாபாரி ஒருவரிடம் கொடுத்து அனுப்பினேன்" என்றார்'
"மொத்த வியாபாரி முகவரி கொடுங்கள் " சிஷ்யர்
அது பக்கத்தில் உள்ள நகரத்தில் உள்ளது 'நகரத்தின் முகவரி கொடுத்தார் கடைக்காரர் "
நகரத்தை நோக்கி பயணித்தார் சிஷ்யர் நகர்த்தில் உள்ள அந்த முகவரிக்கு சென்று தனது ஊர் பெயரையும் கடைக்காராரின் பெயரையும் சொல்லி அந்த 50 ரூபாய்யை கேட்டார் .மன்னித்து விடுங்கள் "அதை நிறுவத்தில் இருந்து வந்த விற்பனை மேலாளரிடம் கொடுத்து விட்டேன் .
இப்படி ஒன்று தொட்டு ஒன்று சென்று கடைசியில் கஷ்டப்பட்டு குரு பெயர் எழுதிய அந்த 50 ரூபாயை வாக்கிவிட்டார்
இன்னொரு சிஷ்யர் நுலகம் சென்று அந்த புத்தகத்தை கேட்டார் அதற்கு "எங்கேயோ வைத்து விட்டேன் நீங்களே தேடிக்கொள்ளுங்கள் ''அறையை திறந்து காட்டினார் நூலகர் "அடேங்கப்பா ஒன்றா இரண்டா ஓராயிரத்திற்குமேல் புத்தகங்கள் எப்படி தேடுவது என்ற எண்ணத்தில் மெய் மறந்து நின்றார் அந்த சிஷ்யர் ....சரி அடுத்த குரு ஆவதற்கு ஆவலில் தேடினார்...தேட தேட புத்தகத்தை படிக்க படிக்க தன்னையே மறந்து தான் குரு ஆவதின் ஆசையை மறந்து படித்ததில் அந்த குருவின் பெயர் வந்த புத்தகம் கூட கடந்து சென்று ஓரமாய் கிடந்தது
இரவு வெகு நேரம் படித்து அறிவு நிறைந்தவனாகவும் வெறும் கையோடும் தன் இல்லத்திற்கு சென்றான் .
மறுநாள் வெள்ளிக்கிழமை இவன் வெறும் கையேடு இருந்ததை பார்த்த அந்த 50 ரூபாய் வைத்திருந்த சிஷ்யருக்கு பயங்கர சந்தோஷம்..
குருவின் அறையில் நூலகர் "சாமி தாங்களின் சிஷ்யர் வெகுநேரம் இந்த புத்தகத்தை தேடினார் அதை பார்த்தும் பார்க்காதது போல் இருந்து வேறு புத்தகத்தினை படிப்பதில் ஆர்வமாகவே இருந்தார் அவரிடம் கொடுக்கவேண்டும் "என்றார் ""அதை நானே கொடுத்து விடுகிறேன் "என வாங்கிக்கொண்டார் ...
விடிந்தது இருவரும் வந்தனர் குருவின் முன்னாள்
முதலில் 50 ரூபாயை கொடுத்து "இதோ நீங்கள் எழுதிய ரூபாய் என்று நீட்டினார் குரு வாங்கி கொண்டார்" நீ எதுவும் செய்யவில்லையா என இன்னொரு சிஷ்யனிடம் கேட்டார் குரு.. இதன்மூலம் நீங்கள் கற்று கொண்டது என்ன உடனே "நான் குரு மட்டும்மல்ல சிஷ்யன் ஆவதற்கும் தகுதி இல்லாதவன் நான் கற்றதை விட கல்லாதது எவ்வளவோ இருக்கிறது .அவரிடமே தங்களின் பதவியை கொடுத்துவிடுங்கள் என்றார்
குரு சொன்னார் பணம் பெறுவது எளிது அது ஒரு வெறும் காகிதம் அறிவை தேடுவது கடினம் ஆனால் இறைவனை தேடுவதைப்போல் என்று புத்தகத்தையும் தனது மேல் துண்டையும் போர்த்தி நீதான் எனது வாரிசு
என் கட்டி தழுவினார் குரு ............பணம் தேடி சென்றவன் வெட்கத்தால் தலை குனிந்தான் ..............
'