பந்தயக் குதிரைகள்
பஸ் தினக் கொண்டாட்டமாம்!உச்சக் கட்ட இரைச்சலோடு பஸ்சில் ஏறியது மாணவர் பட்டாளம் ஒன்று....மாமு இன்னிக்கு பஸ் டே ன்றதால யாரும் டிக்கெட் எடுக்க மாட்டோம் .நடத்துனரின் நாடித் துடிப்பை அதிகப்படுத்தும் விதமாய் ஒருவன் இரைய மற்ற மாணவச் செல்வங்கள் பஸ்சின் மேற்கூரையில் தட்டி ஆமோதித்தனர் ..
கவனத்தை திசை திருப்ப செய்தித்தாளில் முகம் புதைத்துக் கொண்டேன் ...பட்ஜெட் செய்திகள் மூச்சுத் திணற வைக்க பக்கத்தை திருப்பினால்,,இளையசமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் சைபர் க்ரைம் பற்றிய எட்டு பத்தி செய்திக் கட்டுரை .......
காலையில் செய்த தியானத்தின் அமைதி மொத்தமாய் பறிபோனது......பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞன் முகம் சுழிக்க வைக்கும் வார்த்தைகளால் யாரையோ வசை பாடிக்கொண்டு இருந்தான் அவன் கைபேசிக்கே வலிக்கும் வண்ணம் .....
எங்கே போய்க்கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்? தரமற்ற பேச்சும்,நடவடிக்கைகளும் இவர்களை எங்கு கொண்டு சேர்க்கும் ?
பொறியியல் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கிவிட ,பஸ் அமைதியானது ...
அதுவரை நின்றுகொண்டு பயணித்துக் கொண்டிருந்த படித்த தோற்றமுள்ள ஒரு நடுத்தர வயது மனிதர் என்னருகில் அமர்ந்தார் ..
என்ன சார் புயல் கரைகடந்த மாதிரி இருக்கா ?
சிரித்தபடி அவர் கேட்டாலும் ,என் எண்ணங்களை
அவர் படிக்கும் அளவிற்கு முகத்தை மாற்றியிருக்கிறேன் என உணர்ந்து வெட்கினேன்.
படிக்கற பசங்களுக்கு ஒரு பேசிக் டிசிப்ளின் வேணாமா சார்?அது இல்லாம இவங்க படிச்சு என்ன சாதிக்கப் போறாங்க/? என் மனக்குறையை
கொஞ்சம் மெருகோடுதான் வெளிப்படுத்தினேன் .
நிஜம்தான் சார் ..இப்ப உள்ள பசங்களப் பாத்து எல்லாருக்கும் வர்ற சந்தேகம்தான் ...
நானும் ஒரு காலேஜில்தான் வேலை
பார்க்கிறேன் பத்து வருஷமா.....முதல்ல உங்கள
மாதிரி எனக்கும் கோபம்தான் வரும் ...ஆனா கடந்த பத்து வருஷத்துல அவங்கள்ள ஒருத்தனா வாழ்ந்து பார்த்தப்ப சில விஷயங்களப் புரிஞ்சிகிட்டேன் சார் ...இப்படி கூட்டமா ரகளை பண்ணிட்டுப் போனாங்களே அவன் ஒவோருத்தனையும் தனியாக்கூப்பிட்டுப் பேசிப்பாருங்க சார் ...தினம் அவங்களத் துரத்துற மன அழுத்தங்களப்பத்தி பேசிக் குமுருவாங்கஇந்தக் கூட்டத்துல பத்துல ஒருத்தன் கூட விருப்பப் பட்டு இந்த பொறியியல் கல் லுரியில சேர்ந்திருக்க மாட்டான்.பெற்றோர் நிர்ப்பந்ததுனால தன்னோட கனவுத் துறைய கைகழுவிட்டு இங்க வந்து புரியாத பாடத்திட்டம் ஒருபுறம் ,கடன வாங்கி படிக்க வைக்கிற பெற்றோர் ஒருபுறம் ,தோத்துப் போயிருவோமோ
என்கிற பயம் ஒருபுறம்னு துரத்த பந்தயக் களத்துல ஓடுற குதிரைகள் போல ஓடிகிட்டு இருக்காங்க சார் .அந்த வேகத்துல விவேகத்த கொஞ்சம் இழந்துட்டதாலத்தான் இந்தக் கத்தலும்,ஆர்ப்பாட்டமும் .அரிதாரத்தப் பூசி அழுத்தத மறைக்கப் பாக்கராங்களோன்னு கூட எனக்குத் தோணும் ..
என்னோட அனுபவத்தில இப்படி உதவாக்கரை பட்டம் வாங்கின எத்தனையோ பசங்க
கா லப்போக்கில மாறி பதவிசா பெரிய பொறுப்பில இருக்கறதையும் பார்கிறேன் ..மொத்த விளைநிலத்துல பயனற்ற சாவியாப் போற பயிர்கள் உண்டுதான் .அவங்களுக்காக நான் வாதாடல சார் ..நம்ம காலங்கள விட அதிகரிச்சுட்டே போற சவால்களையும் அழுத்தங்களையும் சமாளிச்சு வளர வேண்டிய கட்டாயத்துல இருக்கிற இவங்கள புரிஞ்சிக்குறதுக்காக கொஞ்சம் அதிகம் பேசிட்டேன் ..சாரி ...நம்பிக்கை இழக்கவேண்டாம் சார் .சொல்லிவிட்டு நிறுத்தத்தில் இறங்கி விட்டார் .அவர் சொன்ன சில உண்மைகளை மனம் அசைபோட ஆரம்பித்தது ...
im .