ஏணிகள்
ஏணிகள் ஏதுமில்லை
ஏற்றிவிடும் ஏணி என்று
சறுக்குமரத்தில் தொங்காதே!
ஆற்று வெள்ளத்தில்
தத்தளிக்கும்போது
கரையிலிருக்கும்
புற்களைப்பிடித்தும்
கரை ஏறலாம்
கப்பல் வரும் என்று
காத்திருக்காதே!
கழுதை மீதமர்ந்து
குதிரை பந்தயம்
போகமுடியுமா?