தண்ணியோடு.......... எழுதுகிறேன்...

சாய்ங்காலம் வந்துவிட்டது
சத்திழந்த மனசு சொன்னது..
நீ தூக்கி வீசிய ரோஜா....
தண்ணியடி ராஜா..
கண்ணீரை கைவிடு..
தண்ணியை கையிலெடு...
தலை மூழ்கிவிடு காதலை.......

சாந்தி கிடைக்குமென
சரக்கு அடித்தேன்; முறுக்கு கடித்தேன்;
கண்ணைமூடி உன்னை நினைத்தேன்
அப்போதுதான் அறிந்துக்கொண்டேன்
மயக்க சரக்கில் இல்லையடிசாந்தி
நீ தூக்கி வீசிய
மல்லிகை சரத்தில் உள்ளதடி சாந்தி.

திரும்பவும் தேடியெடுக்கிறேன்
நீ கிழித்தெறிந்த கடிதங்களை.,
புதிதாய் ஒரு க‌விதை
புனைந்து புனைந்து கொடுக்க..,
தண்ணியில் உளருகிறான் என
தப்பாக நினைக்காதே....!
தண்ணிரோடு எழூதவில்லையடி..
கண்ணிரோடு எழுதுகிறேன்....

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (26-Mar-12, 6:34 pm)
சேர்த்தது : ஆரோ
பார்வை : 256

மேலே