அஞ்சி அஞ்சி வரும் வஞ்சிக் கொடி

அஞ்சி அஞ்சி மெல்ல
நடந்து வருவாள்
வஞ்சி கொடியவள்
வான்மேக நிறத்தினாள்
கொஞ்சு தமிழ் பேச்சு உடையாள்
கோலமிடும் காதல் விழி உடையாள்
பஞ்சு நிகர்த்த மனமுடையாள்
பாதத்தில் கொஞ்சும் கொலுசு ஒலி உடையாள்
நெஞ்சில் படரும் நேச மலர் கொடியாள்
நித்திரை கலைத்தென் கனவில் நித்தம் சிரித்திடுவாள்
----கவின் சாரலன்