இதை யாரும் படிக்கவேண்டாம்

என்ன எழுதுவது?
எதை எழுதினாலும்
யாரோ எழுதிவிட்டர்கள்
என்று தோன்றுகிறது.
எழுதும் வார்த்தைகளெல்லாம்
அடுத்தவர் வார்த்தைகளாக
அடிக்கவருகிறது.
கதை எழுதுவதா?
கட்டுரை எழுதுவதா?
கவிதை எழுதுவதா?
கதைஎழுதும்போது...
எழுதும்போதே தூங்கிவிடுகிறேன்
எழுதியதை யார் படிப்பது?
கட்டுரை எழுதுவதா?
எதை எழுதுவது?
அடிக்கிவைத்தவை
அடுக்கடுக்காய் அலமாரியில்.
கவிதை எழுதுவதா?
கண்முன் வரும்
எல்லோரும் கவிஞர்களே
கான்பவைகளெல்லாம்
கவிதைகளே!.
இல்லாததையும் பொல்லாததையும்
எழுதலாம் என்றால்
அட...ஆண்டவா!
அதையும் எழுதியவர்கள் ஏராளம்.
கருத்துக்கள் எழுதினால்
மோதல்கள் வருது
நடப்பதை எழுதினால்
அழுகை வருது.
உன்னைப்பற்றி எழுதினால்
கோபம் வருது உனக்கு.
என்னைப்பற்றிதான்
இனிமேல் எழுதவேண்டும்
என்னைப்பற்றி எழுத
என்ன இருக்கு?