நீயே நீயே நீயே தான்டா...

வரமாக வந்த
சாபம் நீ
சாபத்தை நீக்கும்
வரம் நீ

பேசாமல் சொல்லும்
வார்த்தை நீ
பேசவைக்கும்
மௌனம் நீ

சோகத்தில் கிடைத்த
சுகம் நீ
சுகத்தை கொடுக்கும்
சுமை நீ

கவிதை தந்த
கனவு நீ
கனவைக் கலைத்த
கவலை நீ

தனிமையைக் கொடுக்கும்
கூட்டம் நீ
கூட்டத்தில் தொலைந்த
தனிமை நீ

இன்பத்தில் வந்த
கண்ணீர் நீ
துன்பத்தில் வந்த
புன்னகை நீ

தேடாமல் வந்த
தெய்வம் நீ
தேட வைக்கும்
சொந்தம் நீ

எனக்குள் இருந்து கொண்டே
என்னை வதைக்கும்
உயிரும் நீயே
நீயே நீயே தான்டா

எழுதியவர் : சுதந்திரா (18-Sep-10, 5:39 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 485

மேலே