இப்படியான ஓர் இந்தியா வேண்டும்
இப்படியான ஓர் இந்தியா வேண்டும்
பிச்சைகாரர்கள் இல்லாத பேருந்து நிலையம்
கிருமிகள் வர யோசிக்கும் கழிவறை
குழந்தை இல்லாத குப்பை தொட்டி
துர்நாட்டம் இல்லாத ரயில் நிலையம்
சாலை விபத்தில் துடிப்பவனுக்கு உதவும் எண்ணம்
ஆட்சி மொழியும் அன்னிய மொழியும் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள்
கந்து வட்டிகாரனிடம் தன்மானம் இழக்காத பெண்மணி
இறுதியாக...
வறுமையின் வாட்டத்தால் தற்கொலை செய்திடாத விவசாயி
இப்படியான ஓர் இந்தியா
எனக்கு வேண்டும் தருவீரா?
இல்லையேல்
இதையும் என் நிறைவேறா
ஆசையில் சேர்ப்பிரா ?