தாலாட்டு...
காலம் என்ற க்த்தி
குத்தி போட வந்தாலும்
குறுக்கே வந்துநின்றாலும்
நீ குத்தி போட்ட நெல்லு
சோற்றுக்கு சோடியாகுமா....?
வெண்ணெய்யில் விளைந்த
பதார்த்தங்கள் பவனி வந்தாலும்
நான் குடித்த பாலுக்கு
ஈடாகுமா.........?
காலத்தின் வேகம் களைபோட்டு
தள்ளுது தாயே..........
உன் மடிமீது தலைவைத்து
நான் தாலாட்டு பாட..
என் தலைமீது தலைவைத்து
என் தாயே நீ
கண்ணுறங்கு..........!!!!!!