என் தாய்

பாரம் என பாராமல்
பத்துமாதம் என் சுமைதாங்கி
கண்மூடி நான் தூங்க
தன் தூக்கம் நீ கலைத்தாய்..
என்மீது கொண்ட கனவுகளையே
தினம் உன் உணவுகளாய்
நீ கொண்டாய்..
இம்மண்ணில் புதுப்பிறவி
நான் எடுக்க
மறுபிறவி நீ எடுத்தாய்...
என்ன தவம் செய்தேனோ
ஏழு ஜென்மத்தில்
என் தாயின் கருவூலத்தில்
தஞ்சம் பெற...